உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்

ஜக்கனாரை ஊராட்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

Published On 2022-05-18 15:37 IST   |   Update On 2022-05-18 15:37:00 IST
சுற்று சூழல் பாதுகாப்பினை உறுதிபடுத்த மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அரவேணு:

கோத்தகிரியில்  முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்கவும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவுறுத்தல் படியும்ஜக்கனாரை ஊராட்சி மன்றம் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பினை உறுதிபடுத்த மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

இதன் மூலம் சுகாதார சீர்க்கேடு முற்றிலும் தடை செய்யப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உட்கொள்வதால் இறப்பு மற்றும் ஏற்படும் தீங்கை தடுக்க முடியும். 

மீண்டும் மஞ்சள் பை திட்டம்‌ மூலம் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு தாங்களாகவே முன்வந்து அவர்களுக்கு மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது. 

இதை முன்னின்று  ஜக்கனாரை ஊராட்சி  தலைவர் சுமதி சுரேஷ் தொடங்கி வைத்தார், துணைத்தலைவர் ஜெயந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்று நடத்தினார்கள்.நிகழ்ச்சியில்  அப்பகுதி  பொதுமக்கள் மற்றும்  சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். 

மேலும்  பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

Similar News