உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-05-18 15:26 IST   |   Update On 2022-05-18 15:26:00 IST
தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு மாணிக்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னமணி(37). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபகா லமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சின்னமணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் சம்பவ த்தன்று பரிமளா வேலைக்கு சென்று விட்டார் வீட்டில்  தனியாக இருந்த சின்னமணி  தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் விட்டத்தில் தூக்குபோட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். பரிமளா பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

 பின்னர் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சின்னமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News