உள்ளூர் செய்திகள்
கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிபர்கள் உருவம்.

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

Published On 2022-05-18 15:13 IST   |   Update On 2022-05-18 15:13:00 IST
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி குறித்து போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி குறித்து போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ள ம்பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி தேன்மொழி (47). கோதண்டராமன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இல்லாத போது தேன்மொழி கடையை கவனித்து வந்தார். 

இந்நிலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு வந்தனர். அப்போது கடையில் தேன்மொழி மட்டும் இருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தேன்மொழியிடம் தண்ணீர் கேட்டனர். 

அவர் தண்ணீர் எடுக்க திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென தேன்மொழி கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றார். தேன்மொழி தாலிக்கொடியை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன் என சத்தம் போட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைகண்ட அந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். அப்போது தேன்மொழி கடைக்குள் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் உள்ள காண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில்  2 வாலிபர்கள் சென்றதும், அவர்கள் நகை பறிக்க முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News