உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்

Published On 2022-05-18 15:05 IST   |   Update On 2022-05-18 15:05:00 IST
ஈரோட்டில் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் கால் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் எலவமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62).இவர் நேற்று காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் தனியார்  பஸ்சில் ஏறினார். 

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுப்பிரமணி படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். பஸ் நெறிக்கல் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் திடீரென பஸ் பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார். 

இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேதனை தாங்காமல் அலறிய அவரை பஸ்சில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News