உள்ளூர் செய்திகள்
மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த 703 மி.மீட்டர் மழை

Published On 2022-05-16 16:31 IST   |   Update On 2022-05-16 16:31:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 703 மி.மீட்டராகவும், சராசரி 33.48 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது.

இதனை தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் ஓரளவு கோடை வெப்பம் தணிந்து உள்ளது.

மழையின் அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-

கள்ளக்குறிச்சியில் 24, தியாகதுருகம் 16, விருகாவூர் 22, சின்னசேலம் 28, அரியலூர் 35, கடுவனூர் 75, கலையநல்லூர் 29, கீழ்பாடி 41, மூரார்பாளையம் 32, மூங்கில்துறைப்பட்டு 52, ரிஷிவந்தியம் 44, சூளாங்குறிச்சி 32, வடசிறுவலூர் 39, மாடாம்பூணடி 21, மணலூரபேடடை 10, திருக்கோவிலூர் 47, திருப்பாலபந்தல் 14, வேங்கூர் 73, ஆத்தூர் 5, எறையூர் 15, ஊ.கீரனூர் 49, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூரில் 75 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக ஆத்தூரில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 703 மி.மீட்டராகவும், சராசரி 33.48 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

Similar News