உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடன் பெற சிறப்பு முகாம்கள்

Published On 2022-05-15 07:31 GMT   |   Update On 2022-05-15 07:31 GMT
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23 ந் தேதியும், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 ந் தேதியும், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25 ந் தேதியும், குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26 ந் தேதியும், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27  ந் தேதியும் நடைபெறவுள்ளது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News