உள்ளூர் செய்திகள்
நெல் மூட்டைகள் சேதம்

திட்டக்குடி பகுதியில் மழை- நெல் கொள்முதல் நிலையத்தில் 50 ஆயிரம் மூட்டைகள் சேதம்

Published On 2022-05-14 10:38 GMT   |   Update On 2022-05-14 10:42 GMT
நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதாத்தூர் கிராமத்தில் குறுவை சாகுபடியில் அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள மருதாத்தூர், இறப்பாவூர், மேலூர், சிறுமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யாமல் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகிறது. இதனால் தேங்கி உள்ள நெல் மூட்டைகள் அதிகாலை பெய்த திடீர் மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.

நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News