உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மனைவியை கத்தியால் குத்திய கணவன்

Published On 2022-05-12 14:52 IST   |   Update On 2022-05-12 14:52:00 IST
நடத்தையில் சந்தேகம் அடைந்து நடுரோட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடிவருகிறாகள்.
புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை தியாகுமுதலியார் நகரை சேர்ந்தவர் சசிகுமார். டைல்ஸ் தொழிலாளி இவரது மனைவி தேவி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
 
இதற்கிடையே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சசிகுமார் அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சசிக்குமார் அடித்து உதைத்து சித்தரவதை செய்ததால் தேவி அவரை விட்டு பிரிந்து தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் தங்கி புதுவையில் உள்ள் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். 

ஆனாலும் தேவி வீட்டுவேலை செய்யும் வீட்டுக்கே சென்று அவ்வப்போது சசிக்குமார் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டு வேலை முடிந்து தேவி புஸ்ஸி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிக்குமார் திடீரென தேவியை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி போன தேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேவியின் தாயார் ஜெயலலிதா கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Similar News