உள்ளூர் செய்திகள்
பாமகவில் இணைந்த நெய்வேலி இளைஞர்கள்

பா.ம.க.வில் இணைந்த நெய்வேலி இளைஞர்கள்

Published On 2022-05-11 15:50 IST   |   Update On 2022-05-11 15:50:00 IST
பா.ம.க. இளைஞரணி முன்னாள் துணைச்செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் 20 இளைஞர்கள் பா.ம.க.வில் இணைந்துள்ளனர்.
நெய்வேலி:

பா.ம.க.வின் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது நெய்வேலி சட்டமன்றத் தொகுதி புதுப்பாளையத்தை சார்ந்த தி.மு.க.வைச் சார்ந்த 20 இளைஞர்கள், அதில் இருந்து விலகி, புதுப்பாளையத்தைச் சார்ந்த பா.ம.க. இளைஞரணி முன்னாள் துணைச்செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் சிறுதொண்டமாதேவி பாலகுரு முன்னிலையில் சிவசங்கர், சிவா, சரவணன், தமிழ்ச்செல்வம், செல்வகணபதி, கோகுல், ராஜ்குமார், மாயவேல் உள்ளிட்டோர் பா.ம.க.வில் இணைந்துள்ளனர்.

அவர்கள் மரியாதை நிமித்தமாக முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து கோ.ஜெகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு பா.ம.க. சார்பில் சால்வை அணிவித்தும், 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு விளக்க கையேட்டினையும், வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News