உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து

Published On 2022-05-11 14:32 IST   |   Update On 2022-05-11 14:32:00 IST
வில்லியனூர் அருகே முன் விரோதத்தில் பெண்ணை சராமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே முன் விரோதத்தில் பெண்ணை சராமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி செந்தாமரை நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 62) இவரது மனைவி சந்திரா (55). இவர்களது மகன் சரவணன் (34).இவருக்கும் புதுவை வாழக்குளம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன்கள் வினோத், அய்யப்பன், விக்கி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் வினோத் மற்றும் அவரது சகோதரர்கள் சரவணன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சந்திரா மற்றும் அவரது கணவர் ரங்கநாதனிடம் உங்களது மகன் எங்கே என்று கேட்டனர். அவர்கள் பதில் சொல்வதற்குள் வினோத் மற்றும் அவரது சகோதரர்கள் தகாத வார்த்தைகளால் சந்திராவை திட்டினர். 
எங்களுக்கு திலீப் குமாரிடம் இருந்து பணத்தை நீங்கள் தான் பெற்றுத் தரவேண்டும் என கூறினர்.

மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்திரா தலையில் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் ரங்கநாதனையும் கத்தியால் திருப்பி தாக்கினர். அதோடு அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.  

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்திரா கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News