உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தமிழ்நாடு விளையாட்டு ஆடுகளம் செயலி- கடலூர் கலெக்டர் தகவல்

Published On 2022-05-10 11:14 GMT   |   Update On 2022-05-10 11:14 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகள செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
கடலூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இனிவருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியாக ஆடுகளம் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் (தனிநபர்) (குழு) மற்றும் பயிற்றுநர்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.

இந்த செயலியினை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனிவருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகள செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News