உள்ளூர் செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு

மாயமான கணவரை கண்டுபிடித்து தர கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு

Published On 2022-05-10 15:57 IST   |   Update On 2022-05-10 15:57:00 IST
மாயமான கணவரை கண்டுபிடித்து தர கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் . இவரது மனைவி பிரியா (வயது 29). இவர் இன்று காலை வக்கீல் நாகமுத்துவுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நானும் எனது கணவரும் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் நானும் எனது கணவரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி அவரது தம்பி மனைவி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.

பின்னர் 23ந் தேதி திருவாரூருக்கு செல்கிறேன் என தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு சென்றவர் இதுநாள்வரை வீட்டிற்கு வரவில்லை. பின்னர் நானும் எனது உறவினர்களும் எனது கணவரை தேடினேன். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Similar News