உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி 2 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரும் அவரது நண்பரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் இருந்து கல்லுப்பட்டி நோக்கி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் என்ற பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.