உள்ளூர் செய்திகள்
தேர்தல்

கண்மாய் தலைவருக்கான தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த விவசாயிகள்

Published On 2022-05-09 11:53 GMT   |   Update On 2022-05-09 11:53 GMT
வத்திராயிருப்பில் கண்மாய் தலைவருக்கான தேர்தலில் விவசாயிகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட பிளவக்கல் நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. 

வத்திராயிருப்பு தாலுகாவை பொருத்தவரை மொத்தம் உள்ள 20 சங்கங்களில் 14 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 சங்கங்களுக்கான தலைவர் மற்றும் மண்டல பொறுப்பா ளர்கள் தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தல் வத்திரா யிருப்பு பெரியகுளம், விராக சமுத்திரம், கொசவன்குளம், அனுப்பன்குளம், வில்வராயன் குளம், பாதரங்குளம், சித்தாறு, நத்தம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கான தேர்தல் கான்சாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபு ரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடந்தது. 

இந்த தேர்தல் பொதுத்தேர்தலை போன்று வாக்குச் சாவடிகள் அமைத்து நடைபெற்றது. விவசாயிகள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.வயதானவர்களை ஆட்டோவில் அழைத்து வந்தும், நடக்க முடியாத முதியவர்களை தூக்கி வந்தும் வாக்களிக்க செய்தனர்.
Tags:    

Similar News