உள்ளூர் செய்திகள்
திறந்தவெளியில் உணவுப்பொருட்கள் விற்பதை தடுக்க கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் 20க்கும் மேற்பட்ட டீக்கடைகள்,10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஜார் பகுதி எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
இங்கிருந்துதான் கூமாபட்டி, கான்சாபுரம் ,நெடுங்குளம், மகாரா ஜபுரம், அழகாபுரி, பேரையூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களு க்கு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்கள் பிரிந்து செல்கிறது.
பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப்பொருட்கள் திறந்தவெளியில் வைத்து விற்கப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமில்லாமல், பஜார் பகுதியில் வழியாக செல்லும் வாகனங்கள் மூலமாக உருவாகும் தூசிகள் உணவுப்பொருட்களில் படிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்க ளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உ ள்ளதாகவும், பேக்கரிகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஜார் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, டீ கடைகளில் திறந்தவெளியில் உள்ள உணவுப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.