உள்ளூர் செய்திகள்
அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்த வேதாரண்யேஸ்வரர்
வேதாரண்யம் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தில் வேதாரண்யேஸ்வரர் காட்சி அளித்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலிலுள்ள சாமிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
நேற்று சாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்று அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்
மேலும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சந்நிதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.