உள்ளூர் செய்திகள்
மீசலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மேகநாதரெட்

மாணவர்களுக்கு பாடம் கற்பித்த கலெக்டர்

Published On 2022-05-08 15:08 IST   |   Update On 2022-05-08 15:08:00 IST
இல்லம் தேடி கல்வி திட்ட பணிகளை ஆய்வு செய்து மாணவர்களுக்கு கலெக்டர் பாடம் கற்பித்தார்.
விருதுநகர்

விருதுநகர் மீசலூர் கிராமத்தில் உள்ள   சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில்   ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் செயல்பட்டு வரும் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்” பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி  ஆய்வு செய்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடை வெளியை குறைக்க இல்லம்  தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு களாக கொரோனாவின் தாக்கத்தினால் குழந்தை யினுடைய கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.  செல்போன் மற்றும் இணையதள வசதி இல்லாத  ஏழை குழந்தைகளுக்கு கடந்த கொரோனா காலத்தில்  கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.  மேலும் ஒரு குழந்தையினுடைய ஆரம்ப கால கட்ட கல்வி வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அந்த ஆரம்ப காலகட்ட கல்வி வளர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டால் அது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், தன்னார்வலர் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவது  குறித்தும்,   மாணவர்களின் வருகை  குறித்து கேட்டறிந்தேன்.  விருதுநகர் மாவட்டத்தில்  இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 3695 மையங்களில் 3658 தன்னார்வலர்கள் மூலமாக 72044 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.   மாணவர்கள் தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு எவ்வளவு தோல்வி வந்தாலும் தளராமல்  முயற்சி செய்து  வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லம்  தேடி கல்வி  திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்கள்   கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டு,  நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  வெற்றிவேந்தன்,  உதவி திட்ட அலுவலர்  ஜோதிமணி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்  கதிரவன்,  வட்டார கல்வி அலுவலர்  ராமலட்சுமி ஆகியோர் இருந்தனர்.

Similar News