உள்ளூர் செய்திகள்
அச்சக துறைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையை குறைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் அச்சக துறைக்கு தேவையான பேப்பர், பத்திரிகைகள், மை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதையும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதற்கு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
கவுரவ தலைவர்கள் செல்வமணி, ராஜேந்திரன், மனோகரன், குணசேகரன், தேவராஜன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட அச்சக சேவை தொழில் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.
கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரருமான எம்.சி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், ஒன்றிய அதிமுக செய லாளர் காசிநாதன், நிர்வாகி சிவகுமார், அனைத்து வர்தக்க சங்க பேரவை தலைவர் சரவணன், கவுரவத் தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கிருஷ்ண ராஜ், குணா, குமார், பாக்கியராஜ், ராஜா, பன்னீர்செல்வம் நல்லதம்பி, ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கான ஏற்பாடுகளை ஹரி நாராயணன் தண்டபாணி, ராஜாங்கம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.