உள்ளூர் செய்திகள்
சாலையில் விழுந்த வேப்பமரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.

சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்த வேப்பமரம்

Published On 2022-05-01 15:06 IST   |   Update On 2022-05-01 15:06:00 IST
சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது.
சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த டீக்கடையில் முன்பு இருந்த வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் டீக்கடை பக்கவாட்டு சுவர் மற்றும் தரை தளம் சேதம் ஏற்பட்டது.

டீக்கடை உரிமையாளர், டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக அவ்விடத்திலிருந்து தப்பியோடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பழைய பேருந்து நிலையம் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது. 

சாலையின் குறுக்கே மரம் விழுந்த போது சாலையில் காலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த வேப்ப மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இச் சம்பவத்தால பரபரப்பு ஏற்பட்டது.

Similar News