உள்ளூர் செய்திகள்
புத்தக் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி.

இலக்கை அடைய வாழ்க்கையில் திட்டமிட்டு பயணிக்க வேண்டும்

Published On 2022-04-30 14:33 IST   |   Update On 2022-04-30 14:33:00 IST
இலக்கை அடைய வாழ்க்கையில் திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர் தெரிவித்தார்.

அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை  அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி தொடக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், போட்டிகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் எளிதில் வெற்றிப் பெறலாம்.

போட்டி தேர்வுகளையும் எதிர்க்கொள்ள தயராக வேண்டும். வாழ்க்கையில் திட்டமிட்டு பயணித்தால் எளிதில் இலக்கை அடையலாம் என்றார். தொடர்ந்து அவர், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.

முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் கி.சங்கீதா பேசுகையில், மாணவர்கள் தன்னிம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இஷ்டப்பட்டு படித்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட தேவையில்லை என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.ரமேஷ் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எம்.வினோத்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.அய்யம்பெருமாள் வரவேற்றார்.முடிவில் தமிழாசிரியர் சி.பாண்டியன் நன்றி தெரிவித்தார்.

Similar News