உள்ளூர் செய்திகள்
.

பரமத்திவேலூர் பகுதி வியாபாரிகள் தராசுகளுக்கு முத்திரை

Published On 2022-04-30 13:47 IST   |   Update On 2022-04-30 13:47:00 IST
பரமத்திவேலூர் பகுதி வியாபாரிகள் தராசுகளுக்கு முத்திரை போட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் பயன்படுத்தி வரும் அனைத்து வகையான தராசுகளுக்கும் வருகிற மே மாதம் 2-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நாமக்கல் எடை அளவு முத்திரை ஆய்வாளர் வேலூர் நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் முகாமிட்டு அனைத்து விதமான தராசுகளுக்கும் முத்திரை போட உள்ளனர். 

முத்திரை போடாத வியாபாரிகள் கண்டிப்பாக தவறாமல் தங்களது அனைத்து வகையான தராசுகளையும் கொண்டுவந்து முத்திரை போட்டு கொள்ளுமாறு எடை அளவு முத்திரை ஆய்வாளர் அறிவித்துள்ளார். 

எனவே சம்பந்தப்பட்ட வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர் நகர அனைத்து வர்த்தகர்கள் சங்க தலைவர் சுந்தரம் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News