உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே மாணவி மாயம்- போலீசார் விசாரணை
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே ஆண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகேஷ் (வயது19). கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.2ம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.