உள்ளூர் செய்திகள்
கவுரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

கவுரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2022-04-29 10:04 GMT   |   Update On 2022-04-29 10:04 GMT
மயிலாடுதுறை அருகே கவுரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி, அச்சுதராயபுரத்தில்உள்ள கவுரி மாரியம்மன் கோவிலில் 55 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
 
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. காவிரி கரையில் இருந்து மேளதாளம் வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றதது. 

காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும்‌, வாயில் 16 அடிநீள அலகு, 20 அடி நீள அலகு குத்தியும் கோவிலை வந்தடைந்தனர். 

கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்க தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். 
மேலும் 16 அடி நீள அலகு மற்றும் 20 அடி நீளம் கொண்ட அலகினை வாயில் குத்தியபடி பக்தர்கள் தீ மிதித்த காட்சி அங்கிருந்து பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்தது. 

இதனை தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வர காத்தவீரன்நாடகம் நடைபெற்றது. இந்நி கழ்ச்சி ஏற்பாடுகளை கிரா மவாசிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News