உள்ளூர் செய்திகள்
கூட்டம்

மே 1-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்

Published On 2022-04-28 16:10 IST   |   Update On 2022-04-28 16:10:00 IST
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.
கடலூர்:

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மே1 ஆம் தேதியன்று தேசிய அளவில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Similar News