உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே போக்சோவில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறைக்கு சென்றதை அவமானமாக கருதி ஜாமினில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே சந்தியாகிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 21). இவர் செம்மேடு பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடத்தி சென்றுவிட்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் ராஜா வெளியே வந்துள்ளார். போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றதை அவமானமாக நினைத்த ராஜா மனஉளைச்சலில் இருந்துவந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிகிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராஜா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.