உள்ளூர் செய்திகள்
பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-04-27 16:09 IST   |   Update On 2022-04-27 16:09:00 IST
திருமானூரில் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:

திருமானூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக கோடைகால நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. 

அரியலூர் மாவட்டம் திருமானூரில் திருமலைபாடி ரோட்டில் உள்ள சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமையில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   

கடந்த 22 தேதி ஆரம்பிக்கப்பட்ட நீர்மோர் பந்தல்  ஒவ்வோரு நாலும் ஒரு சமூக ஆர்வலர் முறையே வரதராஜன், காசிபிச்சை, ஜெயபால் , அஸ்தா, முருகேசன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க தலைவர் பொன்னுசாமி, கோவிலுர் சாமி ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Similar News