உள்ளூர் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ருட்டி வேளாண் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-04-27 14:51 IST   |   Update On 2022-04-27 14:51:00 IST
1978-80-ம் ஆண்டு வேளாண்மை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்குப் பிறகு பண்ருட்டி ஐஸ்வர்யா ரவிசேகர் தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பண்ருட்டி:

1978-80-ம் ஆண்டு வேளாண்மை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்குப் பிறகு பண்ருட்டி ஐஸ்வர்யா ரவிசேகர் தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் கருணாநிதி, திருச்செங்கோடு அன்பழகன், சேலம் ராமநாதன் முன்னிலை வகித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட அரசு பணிநிறைவு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் வேளாண்மைத்துறையிலும், தோட்டக்கலைத்துறையிலும் அலுவலர்களாகவும், உதவி இயக்குநர்களாகவும் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Similar News