உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் பஸ் மறியல்
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் கரையோரத்தில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.
சிதம்பரம்:
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் கரையோரத்தில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை அகற்றும் பணி இன்று நடந்தது.
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் காந்தி சிலை அருகே பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டம் பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.