உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே மணல் கடத்திய வேனை துரத்தி பிடித்த போலீசார்
திட்டக்குடி அருகே மணல் கடத்திய வேனை துரத்தி பிடித்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க ராமநத்தம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பதிவு எண் இல்லாத பொலிரோ வேனில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்பட்டு வந்தது.
அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், ராசா ஆகியோர் வேனை மறித்தனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்த வேனை துரத்தினர்.
எழுத்தூர் என்ற இடத்தில் சென்ற போது டிரைவர் வேனை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.