உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனி போலீஸ் படை
காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.சத்திய பிரியா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளையும், அவர்களது கூட்டாளிகளையும் கண்காணிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் அவர்கள் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போலீசார் தினமும் ரோந்து செல்லும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறம்பட செயல்பட கூடிய போலீசார் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் எம்.சத்திய பிரியா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.