உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே டீ கடையில் தீ விபத்து
கடலூர் பாரதி சாலையில் அண்ணா பாலம் அருகே உள்ள டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் பாரதி சாலையில் அண்ணா பாலம் அருகே ஒரு டீக்கடை உள்ளது. இந்த டீக்கடையில் வழக்கம்போல் மாலை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அந்த கடையில் இருந்த சிலிண்டர் டியூப்பில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த டீக்கடைக்கு, டீ குடிக்க வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து, அந்த கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.