உள்ளூர் செய்திகள்
அதிமுக

கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் காசிநாதன் நியமனம்

Published On 2022-04-25 17:55 IST   |   Update On 2022-04-25 17:55:00 IST
அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் காசிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான எம்.சி சம்பத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
கடலூர்:

கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக காசிநாதன் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவின் பேரில் மீண்டும் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக காசிநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்றிய அவைத்தலைவராக ஆதிநாராயணன், ஒன்றிய இணைச்செயலாளராக லட்சுமிகுமார், ஒன்றிய துணைச்செயலாளர்களாக கல்யாண ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளராக வேல்முருகன், ஒன்றிய பொருளாளராக முருகன், மாவட்ட பிரதிநிதிகளாக கிரிஜா செந்தில்குமார், நாகமுத்து, தேவநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி சம்பத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Similar News