உள்ளூர் செய்திகள்
வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரும்பு மேஜை உடைத்த மாணவர்களிடம் உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்

தொரப்பாடி அரசு பள்ளியில் மேஜைகளை உடைத்த 10 மாணவர்கள் சஸ்பெண்டு

Published On 2022-04-25 10:10 GMT   |   Update On 2022-04-25 10:10 GMT
தொரப்பாடி அரசு பள்ளியில் பேர்வெல் பார்ட்டிக்கு அனுமதி அளிக்காததால் மேஜைகளை உடைத்த மாணவர்கள் 10 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை நாற்காலியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி தாசில்தார் செந்தில் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளி யில் சென்று விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் வேலூர் கலெக்டர் அலுவலக த்திற்கு வர வழைக்கப் பட்டனர். அவர் களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் விசாரணை நடத்தினார்.

பள்ளியில் பேர்வெல் பார்ட்டிக்கு (பிரிவு உபச்சார விழா) தலைமை ஆசிரியர் அனுமதி அளிக்கவில்ல. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மேஜை நாற்காலிகளை உடைத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்கள் சஸ்பெண்டு செய்ய ப்பட்டனர். அவர்கள் வருகிற 5-ந்தேதி வரை பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 மேலும் மாணவர்களால் உடைக்கப்பட்ட மேஜை நாற்காலிகளுக்கு அவர்களது பெற்றோரிடம் இழப்பீடு பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில்:&

அரசு பள்ளிகளில் கல்விக்காக மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் தயவுசெய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். மீறி ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள பரீட்சையை முடித்துவிட்டு பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும். தயவு செய்து மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News