உள்ளூர் செய்திகள்
போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் முழங்காலிட்டு போராட்டம்

Published On 2022-04-25 15:37 IST   |   Update On 2022-04-25 15:37:00 IST
கடந்த 21-ந்தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை வளாகத்தில் முழங்காலிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியில் 45 அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தமிழக முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ந்தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை வளாகத்தில் முழங்காலிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.

Similar News