உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி பகுதியில் திடீர் கோடை மழை
பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் மண்ணும் குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
பண்ருட்டி:
பண்ருட்டியில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வறுத்து எடுப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. எனவே எப்போது மழை பெய்யும் என்று மக்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் வங்க கடலில் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் மண்ணும் குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.