உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பண்ருட்டி அருகே எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை

Published On 2022-04-24 16:30 IST   |   Update On 2022-04-24 16:30:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார். பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News