உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவை கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

Published On 2022-04-24 15:16 IST   |   Update On 2022-04-24 15:16:00 IST
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.கண்ணகி தலைமை தாங்கினார். குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், குடியாத்தம் தாசில்தார் லலிதா, குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ்.சவுந் தரராசன், துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் புவியரசி, கே. வி.கோபால-கிருஷ்ணன், சுமதி-மகாலிங்கம், என்.கோவிந்த-ராஜ், ம.மனோஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் மாறன்பாபு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மருத்துவமனை பணியாளர் களுடன் கலந்துரை-யாடல் நடத்தினார்.

மேலும் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு வெகுவிரைவில் எக்கோ கருவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்-களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மின் தடைக்கு காரணம் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.  பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப குறைபாடு, மின்மாற்றி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மின் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த பிரச்சனையை சாதுர்யமாக சமாளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து நடவடிக்-கைகளையும் எடுத்து வருகிறார்.

தற்போது கோடைகாலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக உள்ளது. மின்துறை அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதாக கூறப்படு-கிறது.

இந்தியாவில் 2 கருத்துக்கள் உள்ளது கொரோனா 4 அலை வந்து சென்று விட்டது, வர உள்ளது என கூறப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை காக்க பாதுகாப்பு அரணாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை தமிழக அரசு தயார் நிலையில் வைத்துள்ளது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றார்.

Similar News