உள்ளூர் செய்திகள்
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகளுடன் தயாராக உள்ள கொரோனா வார்டு.

வேலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா- முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2022-04-24 15:16 IST   |   Update On 2022-04-24 15:16:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர்:

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து படுக்கைகளும் தனித்தனியாக திரை கொண்டு மூடும் வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட சிறப்பம்சத்துடன் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு மீண்டும் தயார்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங் களில் தலா 10 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு முழுமையாக இன்னும் விலக்கிக் கொள்ளப் படவில்லை.

முகக் கவசம் அணிவது நடைமுறையில் தான் உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 2 பேர் மட்டுமே பாதிக்கப் பட்டு ள்ளனர். கடந்த 4 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பரவாமல் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News