உள்ளூர் செய்திகள்
இளைஞர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பயணம்
தமிழக இளைஞர்களுக்கு வேலை கேட்டு மாநிலத்தின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் புதுச்சேரியிலிருந்து கடலூர், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி நகரத்திற்க்கு வந்தது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கேட்டு மாநிலத்தின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் புதுச்சேரியிலிருந்து கடலூர், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் வழியாக பண்ருட்டி நகரத்திற்க்கு வந்தது. பயண குழுவிற்க்கு சங்கத்தின் நகர செயலாளர் சங்கர் தலைமையில் பஸ் நிலையம் எதிரே வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைக்கிள் பயனத்தை வரவேற்றுபி.எஸ்.என்.எல். ஒய்வூதியர் சங்க செயலாளர் பாண்டுரங்கன் பேசினர். பயன குழுவில் வருகை தந்த மாநில, மாவட்ட நிர்வாகளுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் உதயகுமார், வாலிபர் சங்க முன்னாள் நகர செயலாளர் தினேஷ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசியர் கூட்டனி முன்னாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் ஜெயஸ்ரீ, மின்சார வாரிய ஊழியர் சங்க செயலாளர் பன்னீர், சுமைப்பணி நகர செயலாளர் நாகராஜ் பித்தளை பாத்திர சங்க செயலாளர் பரமானந்தம், மாற்றுத்திறனாளி சங்க நகர செயலாளர் ஜீவா, ஆட்டோ சங்க செயலாளர் முகமது நிஜார் அஹமது ஆகியோர் சால்வை அணிவித்தனர்
மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.