உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிளில் பஸ்சை மறித்து வாலிபர் ரகளை
வேலூர் கிரீன் சர்க்கிளில் பஸ்சை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் இன்று காலை வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காலை 7 மணியளவில் கிரீன் சர்க்கிள் பகுதியில் மது போதையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
வாகனங்கள் வேகமாக வந்ததால் குறுக்கும் நெடுக்குமாக சென்ற வாலிபரை கண்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் கீழே அமர்ந்து கொண்டு பஸ் செல்ல முடியாமல் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் பஸ்சின் முன்பாக நின்று கொண்டு நகர மறுத்தார். இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாலிபரை எச்சரிக்கை செய்ததால் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார்.
இதனால் இன்று காலை கிரீன் சர்க்கிள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.