உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு

Published On 2022-04-23 15:20 IST   |   Update On 2022-04-23 15:20:00 IST
பெண் போலீஸ் மயங்கி விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பின்புறம் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்குஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து உள்பட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படும்.

இன்று காலை ஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து பயிற்சி நடந்தது. இதில் வழக்கம்போல ஆண், பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்யா (வயது28) என்ற பெண் போலீஸ்காரர் திடீரெனமைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக சத்யாவை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர் சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க முடிவு செய்தனர்.

அதன்படி சத்யாவுக்கு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென பெண் போலீஸ் மயங்கி விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News