உள்ளூர் செய்திகள்
வரி

கடலூர் மாநகராட்சி கடைகளில் வரி பாக்கிகளை வசூலித்து வளர்ச்சி பணிகள் நடைபெறுமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-04-23 09:50 GMT   |   Update On 2022-04-23 09:50 GMT
கடலூர் மாவட்டத்தின் மூலமாக அவர்கள் தெற்கு பிராந்தியத்தை ஆட்சி செய்து வந்தனர். தொடர்ந்து கடல்வழி வணிகத்திற்கும் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வரலாற்றில் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. தமிழகத்தில் நுழைந்த ஆங்கிலேயர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள புனித டேவிட் கோட்டையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.

மேலும் கடலூர் மாவட்டத்தின் மூலமாக அவர்கள் தெற்கு பிராந்தியத்தை ஆட்சி செய்து வந்தனர். தொடர்ந்து கடல்வழி வணிகத்திற்கும் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலமாக கடலூர் நகரம் முதலில் பெரும் நகரமாகவும் அதனைத் தொடர்ந்து நிர்வாக பணிக்காக 1866-ம் ஆண்டு கடலூர் நகரம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதன் எதி ரொலியாக கடலூர் மாவட் டம் இந்தியாவிலேயே முதல் நகராட்சி என்ற சிறப்பு மிக்க அந்தஸ்தைப் பெற்றது.

அதனை தொடர்ந்து 100 ஆண்டுகளை கடந்த கடலூர் நகராட்சி 9.3.1993 -ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் பின்னர் 2.12.2008-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இத்தனை வரலாற்று சிறப்புமிக்க கடலூர் பெரு நகராட்சி 25.8.2021-ம் ஆண்டு ஊராட்சி பகுதிகளான அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், நத்தம் பட்டு உள்ளிட்ட 19 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற நாள் முதல் கடலூர் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ரூபாய் 50 கோடிக்கும் மேலாக வரி பாக்கி உள்ளது தெரியவந்தது. இது குறித்து அறிந்த மாநகராட்சி மேயர் உடனே வரி பாக்கியை செலுத்துமாறு கடைக்காரர்களிடம் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் உள்ள வரி பாக்கிகள் மற்றும் இதர வரி பாக்கிகளை உடனே வசூல் செய்ய வேண்டும். அதன் மூலம் கடலூர் மாநகராட்சியில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், பூங்கா மேம்படுத்துதல், சில்வர் கடற்கரையை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை மேற் கொண்டு கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்ற தேவையான வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டும்.

இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News