உள்ளூர் செய்திகள்
இளம்பெண் மாயம்

பண்ருட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்

Update: 2022-04-23 09:28 GMT
பண்ருட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். அவரது மகள் அஜந்தா என்கிற காயத்ரி ( வயது23). எம்.பி.ஏ. முடித்து விட்டு பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த திருமுருகன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அஜந்தா கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருமுருகன் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து அஜந்தா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப் பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News