உள்ளூர் செய்திகள்
சாமி சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை கண்டெடுப்பு

Published On 2022-04-23 12:06 IST   |   Update On 2022-04-23 12:06:00 IST
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. மர்ம நபர்கள் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என்று வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என 3 ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சாமி சிலை இருந்ததை கண்டெடுத்துள்ளனர். உடனே சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் 2 அடி உயரம் கொண்ட குதிரை வாகனத்துடன் கூடிய சாமி சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சாமி சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் வருவாய் துறையினர் சாமி சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News