உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க.வினர் போராட்டம்

விருத்தாசலத்தில் நாஞ்சித் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

Published On 2022-04-22 17:52 IST   |   Update On 2022-04-22 17:52:00 IST
விருத்தாசலத்தில் நாஞ்சில் சம்பத் சென்ற கார் நிற்காமல் சென்றதால் பாஜக நிர்வாகி கல்கி ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி பா.ஜ.க.வினர் திடீரென புறவழிச்சலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் இது உங்க மேடை என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் விருத்தாசலம் வருகை தந்தார். இது குறித்து அறிந்த பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஜெயப்பிரியா பள்ளி முன்பு புறவழி சாலையில் திரண்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது நாஞ்சில் சம்பத் வந்த கார் வந்து கொண்டிருந்தது. 

அவரை பார்த்ததும் பாஜகவினர் கவர்னர் தமிழிசை, மத்திய அமைச்சர் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காரை தட்டி வழி மறிக்க முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. நாஞ்சில் சம்பத் சென்ற கார் நிற்காமல் சென்றதால் பாஜக நிர்வாகி கல்கி ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி பாஜக வினர் திடீரென புறவழிச்சலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உடன் தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் கல்கிராஜ் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற டிரைவர் மீதும் நாஞ்சில்சம்பத் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு எழுதி இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் கொடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News