உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
திருவண்ணாமலையில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை செட்டித்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக சேர்மன் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் எஸ்.பாண்டியன், வழக்கறிஞர் ஆர்.சக்திமுருகன், துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மல்யுத்த கழக செயலாளரும் மல்யுத்த பயிற்சியாளருமான ஏ.அருண்குமார் வரவேற்று பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக தலைவர் சீனி.கார்த்திகேயன் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து மல்யுத்த வீரர்களுக்கு விளையாட்டு பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள சிறப்பு பேக் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் தமிழ்நாடு மல்யுத்த சங்க துணை செயலாளர் என்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எறிபந்து சங்க அமைப்பு செயலாளர் பி.உதயமுருகன், மாவட்ட மூத்தோர் தடகள சங்க இணை செயலாளர் டி.விஜய் ஆனந்த், மாவட்ட கேரம் சங்க செயலாளர் பி.ராஜா, மாவட்ட மல்யுத்த கழக துணைத் தலைவர் பி.விஜய்குமார், துணை செயலாளர் பி.சுரேஷ், சட்ட ஆலோசகர் டி.கிஷோர்குமார், மல்யுத்த கழக நிர்வாகிகள் ஜெ.கிரண்ராஜ், எஸ்.பாலமுருகன், ஆர்.வல்லரசு, எஸ்.முகமது சுல்தான் கே.சவன்ராஜ், எஸ்.பிரபா, ஜெ.ஹேமாமாலினி, ஆர்.வினோத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மல்யுத்த கழக பொருளாளர் பி.ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி நடத்துவது, தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக சங்கத்தை அனுமதித்து அங்கீகரிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக மல்யுத்தத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் காவல்துறை, வனத்துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றவர்களை பாராட்டுவது, 4 திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை பாராட்டுவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவசமாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் மல்யுத்தத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும் இலவச கோடை கால சிறப்பு மல்யுத்த பயிற்சி முகாம் நடத்துவது.
மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை விரைவில் திருவண்ணாமலையில் நடத்துவது என்று தீர்மானிக்-கப்பட்டது.