உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவிகள் சட்டசபை கூட்டத்தை பார்வையிட்டனர்
காட்பாடி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் சட்டசபை கூட்டத்தை பார்வையிட்டனர்.
வேலூர்:
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் கிராம பகுதியை சேர்ந்த ஏழை மாணவ மாணவிகள் சட்டசபை கூட்டத்தொடரை நேரில் பார்வையிட கதிர்ஆனந்த் எம்.பி. ஏற்பாடு செய்தார்.
காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாதிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி,
விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து உள்ள 354 மாணவ, மாணவிகள் பார்வையிட சென்றனர்.
அவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் சென்றனர். அவர்கள் சட்டசபை கூட்டத் தொடரை பார்வையிட்டனர். மாணவிகள் செல்வதற்கு பஸ் வசதி மற்றும் உணவு ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்க கதிர் ஆனந்த் எம்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட சென்ற மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர்.