உள்ளூர் செய்திகள்
அறுவடை தீவிரம்

புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து, பச்சை பயறு அறுவடை தீவிரம்

Published On 2022-04-22 15:29 IST   |   Update On 2022-04-22 15:29:00 IST
புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்து, அதன்படி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதனை சுற்றிசித்தேரி, பூதவராயன்கோட்டை, மயிலாம்பூர், பூவாலை உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சைபயறு விளைவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பொங்கல் சீசனில் பயிர் விதைப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்ததால் விளைச்சல் செழிப்பாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது அறுவடை காலம் தொடங்கி உள்ளது. ஆனால் அறுவடை செய்வதற்கு போதுமான விவசாய கூலி தொழிலாளிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் எந்திரம் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்து, அதன்படி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடை பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்கிறோம். ஆனால் செலவு ஏறக்குறைய ஒன்றாகத் தான் இருக்கிறது.

இந்த ஆண்டு விளைச்சல் நல்லபடியாக இருக்கும் என்று நம்புகிறோம். சுமாராக ஏக்கருக்கு 2 மூட்டைகளில் இருந்து 8 மூட்டைகள் வரை உளுந்து மற்றும் பச்சைபயறு கிடைக்கும். இதனால் போதுமான லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News