உள்ளூர் செய்திகள்
மாணவிக்கு கல்லூரி முதல்வர் முருகன் பரிசளித்து பாராட்டினார்.

பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

Published On 2022-04-22 15:01 IST   |   Update On 2022-04-22 15:01:00 IST
வேதாரண்யத்தில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசு கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி சுகன்யா. இவர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை

சார்பில் நாகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் 2ம் இடம் பெற்று அதற்கான ரொக்கப் பரிசுக்கும் தேர்வானார். இதையடுத்து, அவருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் அர்ச்சுணன், பேராசிரியர் ராஜா, முனைவர்கள் பாரதிஸ்ரீ, ரெஜித்குமார், பார்த்தீபன், செந்தில்குமார், தனபால்,

ஞானக்கபிலன் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்று மாணவி சுகன்யாவை பாராட்டினர்.

Similar News