உள்ளூர் செய்திகள்
பஸ் வசதி இல்லாததால் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்
நாகையிலிருந்து திருக்குவளைக்கு பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கிராமத்திலிருந்து மேலப்பிடாகை, பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்கு சுமார் 30 கி.மீட்டர் செல்லும் வழி தடத்தில் 10ம்நம்பர் டவுன் பஸ் மட்டுமே
இயங்கி வருகிறது. தினந்தோரும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பணிக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானவர்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்தும், வேலை முடிந்தும் வீட்டுக்கு செல்வோர் இந்த பஸ்சிலேயே செல்வதால் மாணவர்கள் படிக்கட்டில்
தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பஸ்சை இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.